Unknown crocodile
0 Subscriptions 0 Followers
நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட கனடா வாலிபர் கடுமையான தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து வருகிறார்கள். இதுதொடர்பாக மின் சிகரெட் விற்பனை நிறுவனங்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். மின்சார சிகரெட் உடல்நலத்துக்கு கேடு இல்லை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், மின்சாரக் சிகரெட் பயன்படுத்துபவர்கள் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் பயன்படுத்தப்படும் மின்சார சிகரெட்டால் பாதிப்பு இல்லை என்று சொல்லப்பட்டது உண்மை இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நுரையீரல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞர் மின்சார சிகரெட் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் உடல்நிலை குறைபாட்டிற்கு மின்சார சிகரெட் மட்டுமே காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்சார சிகரெட் பயன்படுத்துவதை குறைக்குமாறு கனடா சுகாதார அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளன.ர் இந்த மின்சார சிகரெட் பயன்படுத்துவதற்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புகைப்படம் குறித்து மன்னிப்பு கேட்டிருக்கும் பிரதமர் ஜஸ்டின், நான் அப்படி செய்திருக்கக்கூடாது, அந்தக் காலகட்டத்தில் நான் தெரியாமல் செய்த தவறு இது, என்று தெரிவித்துள்ளார். ”நான் என் வாழ்நாள் முழுவதும் இனவெறிக்கு எதிராக போராடும் எண்ணத்தில் உள்ளேன் ஆகையால் நான் சிறுவயதில் செய்த தவறை மன்னிக்க வேண்டும்” என்று பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
பல்வேறு இனக்குழுக்கள், பல்வேறு நாட்டு மக்கள், பல்வேறு மொழி பேசும் மக்கள் என கலந்து வாழும் கனடா நாட்டில் அனைத்து மக்களை அரவணைத்துச் செல்லுபவர் என்று பெயரெடுத்து இருக்கும் பிரதமர் ஜஸ்டின், அவர்களுக்கு இச்சர்ச்சை பெரிய சிக்கலாக இருந்த போதும் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டு இருப்பதால் இப்பிரச்சனை ஓரளவுக்கு தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
பவளப்பாறைகளை அழிக்கும் அனைத்து செயல்களும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பவளப்பாறைகள் வளர்வதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக கடலுக்குள் ஆங்காங்கே சிறிய அளவில் இருந்த பவளப்பாறைகள் ஒன்றிணைந்து மீண்டும் பெரிய அளவிலான பவளப்பாறைகளாக வளார்ந்தது. பவளப்பாறைகளின் வளர்ச்சியால் மீன்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடலோரப்பகுதிகளில் இருக்கும் மீன்வர்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்துளதாக அரசின் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
கடல் நீரோட்டத்தில் அங்கு வரும் மீன்களால் பவளபாறைகளுக்கு பாது காப்பு ஏற்படுவதாகவும். மீன்கள் தங்குவதற்கு பவளப்பாறைகள் தோதான இடமாக இருப்பதால் மீன் உற்பத்தி பெருமளவு பெருகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இயற்கையை நாம் பேணிப் பாதுகாத்தால், இயற்கை நம்மை பேணி வரளர்க்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும் என கனடாவின் கடற்கரை பகுதியில் வாழும் மீனவ மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.