தமிழகத்தின் நீட் தேர்வின் அரசியல்
கல்வி பொது பட்டியல்
1976, இந்தியாவில் திருமதி.இந்திரா காந்தி அவர்களால் அவசர நிலை அறிவிக்கப் பட்ட நிலையில் , அரசியலமைப்பு சட்டம் 57வது பிரிவில் ,42 வது சட்ட திருத்தம் மூலமாக கல்வியானது பதிவு 11(என்ட்ரி 11) மாநில பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, பதிவு 25(என்ட்ரி 25) ஆக பொது பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த 42 வது சட்டதிருத்தத்தின் மூலம் மத்திய அரசு கல்வி கொள்கைகளில் தலையிட வழிவகுக்கிறது. அதுவே இன்றைய நீட் மற்றும் புதிய கல்வி கொள்கை போன்றவைகளாகும்.
மாநில தேர்வு அடிப்படையில் மருத்துவம் சேர்க்கை.
மருத்துவ படிப்பிற்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்வதற்கான தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கம் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் தமிழகத்தில் போராட்டம் செய்தும்,குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் இடம் மனுகொடுத்தனர் ஆனால் அவை அனைத்தும் பயனில்லை.
அதிமுக மற்றும் நீட் தேர்வு மசோதவும்
அதிமுக கட்சி ஆட்சியில் இருந்த போது கூட்டணி தர்மதிர்க்க நீட் தேர்வில் இருத்து தமிழகத்திர்க்கு விலக்கு கொடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவில்லை.சட்டசபையில் காரசாரமான பேச்சுவார்த்தைகள் சென்றன அதிமுக திமுக குறை சொல்வது திமுக அதிமுக குறை சொல்வதும் சென்று கொண்டிருந்தன.
இருத்தலும் அதிமுக அரசு ஆட்சியின் போது "நீட் தேர்வுக்கு எதிராக மசோதா இயற்றப்பட்டு குடியரசு தலைவர் ஓப்புதலுக்கு" உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்படட்டது. ஆனால் அந்த மசோதா குடியரசு தலைவர் இடம் சென்றுள்ளத என்று கூட கவனிக்கவில்லை அன்றைய அதிமுக அரசு.
நீட் தேர்வு எதிராக திமுக மக்களவை உறுப்பினர்கள் போராட்டம்
அதன் பின்னர் திமுக மற்றும் திமுக கூட்டணி மக்களவை உறுப்பினர்கள் நீட் வேண்டாம் என்று பதாகைகள் ஏத்தி நாடாளுமன்றத்தின் முன்பு கவன ஈர்ப்பு போராட்டம் செய்தார்கள். அதன் பின்னர் நீட் தேர்வை கவனிக்கவில்லை காரணம் தேர்தல் நேரம் நெருங்கியது.
திமுக தேர்தல் அறிக்கையில் நீட்
திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை இரத்து செய்வோம் என்று கோரிக்கை வைத்து தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தர்க்கள். அதன்பின்னர் நீட் தேர்வை அரசியலை சற்று ஒதிக்கிவைத்தர்கள். இடது சரிகட்சிகள் மற்றும் எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்புகள் எழும்ப நீட் தேர்வுக்கு என்ன செய்யலாம் என்ற சட்டமன்றத்தில் ஆலோசனை நடத்தி, திமுக அரசும் சட்டமன்றத்தில் "நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றி" குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர்க்கு அனுப்பினார்கள். இவர்கள் நேரம் ஆளுநர் கிடைப்பில் போட்டர்.
திமுக மக்களவை உறுப்பினர்களும் உள்துறை அமைச்சகமும்
இதை பார்த்த திமுக மக்களவை உறுப்பினர் நீட் விலக்கு மசோதா தொடர்பாக வலியுறுத்தவும் மற்றும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் தொடர்பாக கோரிக்கைகளை கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் சந்திக்க அனுமதி கேக்க அதற்கு உள்துறை அமைச்சகம் தொடர்ச்சியாக அனுமதி மறுத்து வந்தது.
மீண்டும் நாடாளுமன்ற கூட்டுதொடர் ஆரம்பிக்க ஆரம்ப காலகட்டங்களில் இருந்தே திமுக மற்றும் கூட்டணி கட்சி மக்களவை உறுப்பினர்கள் இம்முறை நீட் தேர்வுக்கு விலக்கம் கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்கவில்லை.
திமுகவின் அனைத்து கட்சி கூட்டம்
மீண்டும் திமுக கட்சிக்கு நீட் தேர்வு விலங்கள் எதிராக நெருக்கடிகள் அதிகமாக சென்றது இதை பார்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூடம் ஒன்று நடத்தினார். இந்த கூடம் நீட் தேர்வு எதிராக மசோதா கிடப்பி இருக்கிறது எப்படி ஆளுநக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் , மேலும் இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றார், ஆனால் பாஜக மட்டும் கூடத்தை புறக்கணித்தது.
இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஆதரவு கொடுத்தனர்.மறுமுனையில் திமுக மக்களவை உறுப்பினர்கள் உள்துறை அமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டு கடிதற்கு மேல் கடிதம் எழுத உள்துறை அமைச்சர் இறுதியாக அனுமதி கொடுத்தார். அதன் பின்னர் திமுக மக்களவை உறுப்பினர்கள் உள்துறை அமைச்சரை சந்தித்து "நீட் விலக்கு மசோதா தொடர்பாக வலியுறுத்தியும் மற்றும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்" என்று அந்த சந்திப்பில் கூறினார்.
திமுக முரசொலி நாளிதழும் ஆளுநர் கட்டுரையும்
இதற்கு இடையில் தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளிதழில் ஆளுநர் ஆர்.என். ரவி மீது ''கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி'' என்ற தலைப்பில் பரபரப்பு கட்டுரை ஒன்றை வெளியானது.இதை கண்ட ஆளுநர் கடுப்பாக.மற்றொரு பக்கம் நாடாளுமன்த்தில் "பஜட் 2022" தாக்கல் ஆரம்பம் ஆனது இந்த பஜட் கூட்டு தொடரியில் உரையாடிய எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி பாஜகவை கடுமையாக வார்த்தைகளை கொண்டும் மிகவும் மோசமாக முறையில் திட்டி தீர்த்தர்.
ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இது ஒரு பக்கம் சென்றுகொண்டு இருக்க யாரும் எதிர் பார்க்க மாதிரி தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதில் "நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளோம்" என்று அறிக்கை வெளியானது.
அது மட்டுமின்றி தமிழக ஆளுநர் வரலாற்றிலேயே முதல் முறையாக எத்தனையோ சட்ட மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது ஆனால் அத்தனையையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாமல் அனுப்பப்பட்டது. முதல் முறையாக இந்த நீட் தேர்வுக்கு எதிரான மசோதா மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஆளுநர் மாளிகை. இந்த அறிவிப்பு ஆங்கிலம் மற்றும் தமிழில் இருந்தது.
...இதற்கு முடிவு இல்லாமல் தொடரும் நீட் அரசியல்...