Unknown crocodile
0 Subscriptions 0 Followers
சுவையான காய் வகை என்பதால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் காயாக முருங்கைக்காய் இருந்து வருகிறது. இந்நிலையில் முருங்கைக்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் முருங்கைக்காய் வாங்குவதற்கே பயப்படும் நிலை உருவாகியுள்ளது. நான்கு ஐந்து முருங்கைக்காய் கொண்ட கட்டு பத்து ரூபாய்க்கு கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ஒரு கிலோ முருங்கைக்காய் விலை 220 ரூபாய் என்ற அளவை தொட்டுள்ளது. இது சராசரி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
முருங்கைக்காய் விலை ஏற்றம் குறித்து தெரிவித்திருக்கும் வியாபாரிகள், தமிழ்நாட்டின் மூலனூர், கிருஷ்ணகிரி ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு முருங்கைக்காய் வருவது வழக்கம் எனவும், பொதுவாக நாள்தோறும் 400 மூட்டைகள் முருங்கைகாய் கோயம்பேடுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது 40 முதல் 50 மூட்டைகள் மட்டுமே வருவதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மழையால் முருங்கை பூக்கள் உதிர்ந்து விடும் என்பதால், மழைக்காலத்தில் முருங்கைக்காய் விளைச்சல் குறைவது வழக்கமான ஒன்றுதான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வெயில் காலங்களில் மட்டுமே முருங்கைக்காய் நல்ல விளைச்சலை கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ள விவசாயிகள், விரைவில் மழைக்காலம் முடிந்து, முருங்கைக்காய் வரத்து அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் வடகிழக்குப் பருவக் காற்றின் திசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் வடகிழக்கு பருவ காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வடகிழக்குப் பருவக்காற்றின் மாறுபாடு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி சேலம் தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த காற்றின் மாறுபாடு மேலும் அதிகரிக்கும் எனவும் அடுத்த இரண்டு நாட்களுக்கு வட கிழக்கு பருவ காற்றின் வேகம் அதிகரித்து, காற்றில் திசை மாற்றம் ஏற்படும் காரணத்தால் ராமநாதபுரம் கன்னியாகுமரி நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள செய்யாறில் 133 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினியின் இக்கருத்துக்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ரஜினியின் இந்த பேச்சு குறித்து, பல்வேறு விதமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான தனியரசு ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பழனியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த, கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் தலைவர் தனியரசு, கமல்ஹாசன் ரஜினி இருவரும் இணைந்தால் ஒரு வார்டு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது என தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு அதிசயம் நடக்க போகிறது என்று ரஜினிகாந்த் கூறியது குறித்து கருத்து தெரிவித்துள்ள தனியரசு, குடுகுடுப்பைக்காரர் போல விரைவில் அதிசயம் நடக்கும் என பல ஆண்டுகளாக ரஜினி கூறி வருகிறார் என விமர்சித்துள்ளார். மேலும் பரட்டையும் சப்பாணியும் சேர்ந்து அரசியலில் வெற்றி பெற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.