Unknown crocodile
0 Subscriptions 0 Followers
திமுக கூட்டணியை பொறுத்தவரை, திமுக தலைவர்களை விட காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் அழகிரி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் ரஜினியின் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். அதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கமல் மற்றும் ரஜினி ஆகியோர் சேர்ந்து அதிசயம் என்ற பெயரில் திரைப்படம் வேண்டுமானால் எடுக்கலாம் என்று தெரிவித்திருந்தனர்.
டிடிவி தினகரன் மட்டுமே ரஜினியின் கருத்துக்கு லாவகமாக பதில் அளித்துள்ளார். ரஜினி தமிழ்நாட்டில் அதிசயம் நடக்கும் என்று கூறியிருப்பது ஆட்சிமாற்றத்தை குறித்து கூறியிருக்கலாம் என்று தெரிவித்திருக்கும் டிடிவி தினகரன், தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இல்லாத ஒரு ஆட்சி அமையும் என்பதை ரஜினி கூறியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முடிவதற்கு முன்பாக தமிழ் நாட்டிற்கு மிகப்பெரிய அளவில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தனியார் வானிலை ஆய்வு அமைப்புகளும் இதை உறுதி செய்துள்ளன. மேகங்கள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பயணிப்பதால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதாக தனியார் வானிலை ஆய்வு மையம் ஒன்று தெரிவித்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த சில வாரங்களுக்கு நல்ல மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.
சென்னையை பொறுத்தவரை வெப்பச் சலனம் காரணமாக கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. லேசானது முதல் மிதமான வரை தொடர் மழை பெய்யும் காரணமாக, சென்னை மாநகரில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளதால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நீர் நிறைந்து காணப்படுகிறது. பொதுவாகவே, இந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கு சிறப்பான மழைப்பொழிவு அமைந்த ஆண்டாகவே பார்க்கப்படுகிறது.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ பெரியசாமி, திமுக உள்ளாட்சித் தேர்தலை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாகவும், தேர்தலை கண்டு திமுக பயப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தொடர்ந்து திமுக போராடி வருவதாகவும், ஆனால் தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அதிமுக தள்ளி போட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தேர்தலை கண்டு பயம் இல்லாதவர்கள் ஏன் தேர்தலை தள்ளி வைத்தார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மறைமுக தேர்தலோ நேரடி தேர்தல் எந்த தேர்தலாக இருந்தாலும் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று எளிதாக தூத்துக்குடி மாநகராட்சி கைப்பற்றும் எனவும் தெரிவித்துள்ளார்.
மறைமுகத் தேர்தலை திமுக எதிர்க்கவில்லை எனவும், முதலில் நேர்முக தேர்தல் என்று அறிவித்துவிட்டு, ஒரு சில நாட்களிலேயே மறைமுக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்க காரணம் என்ன என்றுதான் திமுக கேள்வி எழுப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.