के सभी प्रकाशन Shankar Raj . चेन्नई , भारत

Publications
https://avalanches.com/in/chennai__1261_17_09_2019

சமீபத்தில் நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது ஜெகன் மோகனின் ஒய்யெஸ்ஆர் காங்கிரஸ் கட்சி. இளம் முதல்வர், எளிமையான முதல்வர் என்றெல்லாம் பெயரெடுத்து வந்த ஜெகன் மோகன் தற்போடு கொடூர முகத்தை காட்ட தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.


ஆந்திராவின் முன்னாள் முதல்வராக சந்திரபாபு கொண்டுவந்தார் என்பதற்காகவே பல நல்ல திட்டங்களை நீங்குவதும், பெயர் மாற்றுவதும் என பல இரண்டாம் தர அரசியல் வேலைகளை செய்ய தொடங்கியுள்ளார் ஜெகன் மோகன்.


ஆந்திர மக்களின் கனவு திட்டமான அமராவதி திட்டத்தில் நீடிக்கும் குழப்பம், என்.டி.ஆர் பெயரில் இருந்த ஆம்புலன்ஸ் சேவை ஒய்.எஸ்.ஆர் பெயரில் மாற்றப்பட்டது. சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அரசு கட்டிடங்களை இடிப்படு என தரம் தாழ்ந்த அரசியலை ஜெகன் மோகன் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நில நாட்கள் முன்பு சந்திரபாபு நாயுடுவை வீட்டுக்காவலில் வைத்த செயல் ஆந்திரா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


நன்மைகளை செய்து நல்ல பெயர் எடுத்தால் நீண்ட காலம் ஆட்சி செய்யலாம் என்ற பல உதாரணங்கள் இருக்க, சந்திரபாபு நாயுவுக்கு ஆதரவை அதிகரிக்க செய்யும் செயல்களை ஜெகன் மோகன் செய்து வருகிறார் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Show more
0
195
https://avalanches.com/in/chennai__1260_17_09_2019

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு தனிநாடாக இயங்கி வந்த ஜம்மு காஷ்மீர் பகுதியை சில நிபந்தனைகளுடன் இந்தியாவுடன் இணைக்க சம்மதித்தார் அந்நிலப்பகுதியின் அரசர் ஹரி சிங். அவர் விருப்பப்படி 370வது சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் காஷ்மீருக்கு சில சிறப்பு சலுகைகள் கிடைத்து வந்தது. அதில் ஒன்று பூர்வீக காஷ்மீரிகளை தவிர வேறு யாரும் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது என்பது.


இந்நிலையில் சமீபத்தில் காஷ்மீருக்கு அளித்துவந்த சிறப்பு சலுகையை நீக்கியது மத்திய அரசு. இதன் காரணமாக காஷ்மீரில் யாரும் நிலம் வாங்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


இதன் காரணமாக காஷ்மீரில் நிலம் வாங்க கர்நாடக மாநில சுற்றுலா வளர்ச்சித்துறை முடிவு செய்துள்ளது இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ள கர்நாடக மாநில சுற்றுலா வளர்ச்சித்துறை அமைச்சர் ரவி, விரைவில் காஷ்மீரில் நிலம் வாங்குவோம் என தெரிவித்துள்ளார்.

Show more
0
229
https://avalanches.com/in/chennai__1259_17_09_2019

2016ம் ஆண்டு மொகாலியில் நடைபெற்ற போட்டியில் தோனியும் கோலியுன் ஆடிய ஆட்டத்தின் புகைப்படத்தை இரண்டு நாட்களுக்கு முன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த கோலி, தோனியை பாராட்டி எழுதியிருந்தார்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை தற்போது ஏன் பாராட்ட வேண்டும், ஒரு வேளை தோனி ஓய்வை அறிவிக்கப்போகிறாரோ என்று சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்ட நிலையில், அன்று மாலையே தோனி தன் ஓய்வை அறிவிக்கப்போகிறார் என்ற தகவலும் பரபரப்பாக பகிரப்பட்டது.


ஆனால் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தோனியின் மனைவி சாக்‌ஷி ட்விட்டரில் இது குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார்.


மேலும் கோலியும் தன் பங்கிற்கு தோனி குறித்த வதந்திகளில் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார்.

Show more
0
209
Show more