के सभी प्रकाशन Siva Kumar . चेन्नई , भारत

Publications
https://avalanches.com/in/chennai__13636_24_11_2019

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து மீண்டும் தல அஜீத்தை இயக்குகிறார்  வினோத். நேர்கொண்ட பார்வை படம் இந்தியில் வெளியான பின்பு படத்தின் ரீமேக் ஆகும். இதையடுத்து தற்போது அஜித் நடிப்பில்   வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்திற்கு தானே கதை எழுதி திரைக்கதையை அமைத்துள்ளார்.   வினோத் பாணியில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. கடந்த இரண்டு மாத காலமாக இப்படத்தின் தயாரிப்பு பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்ள உள்ளார்.

இப்படத்தில்  நயன்தாரா நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இத்தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் நடிகைகள் குறித்த அறிவிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது. இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படம் குறித்த மிக முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பதுதான் அந்த தகவல்.  இதுவரை அஜித் நடிப்பில் வெளியான இரட்டைவேட படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால், இப்படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என திரைப்பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர். இப்படத்தில் அஜீத் காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show more
0
199
https://avalanches.com/in/chennai__13635_24_11_2019

இரும்புத்திரை படத்தை இயக்கிய மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள படம் ஹீரோ.  இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் அவர்களின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இப்படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் இப் படத்தின் வெளியீட்டுக்கு தடை விதிக்கக்கோரி டிஆர்எஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.    இப்படத்தை தொடங்கிய வகையில் 24 ஏஎம் நிறுவனத்தின் ராஜா தங்களிடம் கடன் வாங்கியதாகவும், அந்தக் கடன் பிரச்சனைகளை தீர்க்காமல் இப்படத்தை வெளியிடக்கூடாது எனவும் அந்நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.  இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தங்களுக்கும் இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், தங்கள் தயாரிப்பு படமான ஹீரோ படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக்கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.  இந்நிலையில் கே ஜே ஆர் நிறுவனமும்   டி எஸ் ஆர் நிறுவனமும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை சுமூகமாக முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.    இது குறித்து தங்களுடைய டுவிட்டர் தளத்தில் அறிவித்துள்ள கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம், ஹீரோ படத்தின் அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக முடிக்கப்பட்டு விட்டன எனவும், இப்படம் திட்டமிட்டபடி அடுத்த மாதம் 20ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது .இதன் மூலம் ஹீரோ படத்திற்கு நிலவி வந்த பிரச்சனை தெரிந்துள்ளது.

Show more
0
194
https://avalanches.com/in/chennai__13634_23_11_2019

கப்பல் படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக், அடுத்ததாக சித்தார்த் நடிப்பில் சைத்தான் கா பச்சா என்ற படத்தை இயக்கினார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் படத்தின் வெளியீடு நீண்ட காலமாக தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் வெளியே தெரியாமலேயே சித்தார்த்துடன் சேர்ந்து தன்னுடைய அடுத்த படத்தையும் முடித்துவிட்டார் கார்த்திக்.

இதுகுறித்து தெரிவித்திருக்கும் இயக்குனர் கார்த்திக்,  சைத்தான் கா பச்சா படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே சித்தார்த் அவர்களிடம் ஒரு வரி கதை ஒன்றைத்தான் சொல்லியதாகவும்,  அது சித்தார்த்துக்கு பிடித்துப்போகவே உடனே   கதையை டெவலப் செய்யுமாறு சித்தார்த் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.  அதன்படி தயாரானது தான் டக்கர் என்னும் படம் என இயக்குனர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

அகங்காரம் கொண்ட மனிதர்கள் மோதிக் கொள்வது தான் டக்கர் படத்தின் கதை எனவும்,  இது வழக்கமான தமிழ் சினிமா பாணியில் அல்லாமல் ப்ளாக் ஹ்யூமர் வகையறாவில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.  இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது குறித்த எந்த ஒரு தகவலையும் படக்குழுவினர் வெளியிடாத நிலையில், படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து தற்போது இப்படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் போஸ்டர்கள் ஆகியவை இன்னும் ஒரு மாத காலத்துக்குள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும் எனவும் வரும் ஜனவரி மாதம் இப்படம் வெளியாகும் எனவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Show more
0
200
Show more