के सभी प्रकाशन Vishnu Kutty . चेन्नई , भारत

Publications
https://avalanches.com/in/hyderabad__5444_11_10_2019

சிரஞ்சீவி நடிப்பில், சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் படம் நரசிம்ம ரெட்டி.  ஆந்திர மாநிலத்தில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய போராளியான   நரசிம ரெட்டி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் சிரஞ்சீவிக்கு நரசிம்மரெட்டி பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.  மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்திற்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.  இந்நிலையில் இப்படத்தை பார்ப்பதற்கு தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை அவர்களுக்கு, நடிகர் சிரஞ்சீவி அழைப்பு விடுத்திருந்தார்.  சிரஞ்சீவியின் அழைப்பை ஏற்று நேற்றுமுன்தினம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில்  இப்படத்தை தன் குடும்பத்துடன் பார்த்து ரசித்தார் தமிழிசை. படத்தை பார்த்துவிட்டு சிரஞ்சீவி மற்றும் படக்குழுவினரை   பாராட்டினார் தமிழிசை.   

மேலும்  தன்னுடைய டுவிட்டரிலும்,  இப்படம் குறித்து மிகவும் பாராட்டியுள்ளார், தமிழிசை.  மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளுக்கு அஞ்சலி செலுத்துவது போல் இப்படம் அமைந்திருக்கிறது என்றும்,  இந்திய சுதந்திர போராட்டத்தில் தென்னிந்தியர்களின் பங்கு ஏப்பேர்பட்டது என்பதை உணர்த்தும் வகையில் இப்படம் அமைந்துள்ளது எனவும், அவர் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பாராட்டியுள்ளார். மேலும் நரசிம்ம ரெட்டி அவர்களின் உற்ற நண்பனாக உற்ற நண்பனான ராஜபாண்டி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதியையும், குறிப்பிட்டு பாராட்டியுள்ளார் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

Show more
0
212
https://avalanches.com/in/hyderabad__5443_11_10_2019

ஆந்திர மாநிலத்தை ஆட்சி செய்யும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்று கூறி பாஜகவின் விவசாய அணியான கிசான் மோர்ச்சா அமைப்பு, குண்டூரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது.  மாநில புகையிலை வாரிய தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் ஆந்திர மாநில செய்தி தொடர்பாளருமான ரகுநாத் பாபு இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர்,  இதற்கு முன்பு ஆந்திர மாநிலத்தை ஆட்சி செய்த தெலுங்கு தேசம் கட்சியை போலவே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இல்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால்தான் , தெலுங்குதேசம் கட்சி மீது மக்கள் கோபம் அடைந்து அக்கட்சியை வீட்டுக்கு அனுப்பி உள்ளனர் எனவும்,  தெலுங்கு தேசம் கட்சிக்கு ஏற்பட்ட நிலைமை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒய்.எஸ்.ஆர். ரைத்து பரோசா திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனவும்,  விவசாய காப்பீடு தொகைகள் விரைவில் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.  ஆந்திர மாநிலத்தின்  முக்கிய கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, விவசாயிகளுக்காக போராட நிலைமையில், அதற்கு பதிலாக பாரதிய ஜனதா கட்சி  போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Show more
0
255
https://avalanches.com/in/hyderabad__5442_11_10_2019

ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடாவில் அமைந்துள்ள சத்திய பிரசன்னா நகரில் இருக்கும் பாஸ்கரா அடுக்குமாடி குடியிருப்பு சேதம் அடைந்ததைத் தொடர்ந்து,  காக்கிநாடா மாநகராட்சி அந்த குடியிருப்பை இடிப்பதற்கு உத்தரவிட்டது.  ஆனால் இதை எதிர்த்து பில்டர்கள் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியுள்ளனர். இந்நிலையில்   மாநகராட்சியின் உத்தரவை செயல்படுத்த வேண்டுமென கோரி,  குடியிருப்புவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காக்கிநாடாவில் உள்ள பாஸ்கரா எஸ்டேட் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில்,  மூன்று தூண்கள் சேதமடைந்தன.  இதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் கட்டிடம் இடிந்து விழும் எனக்கூறி,  அந்த அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க,  காக்கிநாடா மாநகராட்சி உத்தரவிட்டது.  இதையடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 40 குடும்பங்களும் வெளியேற்றப்பட்டது.  இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க கூடாது என்றும்,  அதற்கு பதிலாக மறுசீரமைப்பு செய்ய வேண்டுமெனவும் அந்த குடியிருப்பை கட்டிய பில்டர்ஸ் நிறுவனம் காக்கிநாடா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம்,  பாஸ்கரா எஸ்டேட்   அடுக்குமாடி குடியிருப்பை இடிப்பதற்கு இடைக்கால தடை விதித்தது.  இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பை முறையாக கட்டாத பில்டர்களுக்கு எதிராக, குடியிருப்பு வாசிகள் மற்றும் அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் தரமில்லாத கட்டிடத்தை கட்டியதற்காக  கட்டுமான நிறுவனம் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Show more
0
241
Show more