के सभी प्रकाशन Pooja Arjun . चेन्नई , भारत

Publications
https://avalanches.com/in/bengaluru_22_5429_11_10_2019

கர்நாடக மாநிலத்தின் சிவமொக்கா மாவட்டத்தில்,  600 ஆண்டுகள் பழமையான   பத்தகத்தே ஹீரே மடம் அமைந்துள்ளது.  இம்மடத்திற்கு, ராணி சென்னம்மா அவர்கள்,  1672 ஆம் ஆண்டு விலை மதிப்புமிக்க மரகத லிங்கம் ஒன்றை நேர்த்திக்கடனாக கொடுத்திருந்தார். ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி இன் போதும் அந்த மரகதலிங்கம் மடத்தில் வைத்து பூஜை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 1997 ஆம் ஆண்டு இம்மடத்தின் மடாதிபதி, அந்த மரகதலிங்கத்தை வங்கியில் அடமானமாக வைத்து கடன் வாங்கி இருந்தார்.  அதன் பிறகு மடத்தில் ஏற்பட்ட பல்வேறு பதவிப் போட்டியில் அந்த மரகதலிங்கம் மீட்க படாமலேயே இருந்துவந்தது.  இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஹரதாலுஹாலப்பாவிடம், அப்பகுதி மக்கள் மரகதலிங்கத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து இப்பிரச்சனையை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விடம் கொண்டு சென்ற ஹரதாலுஹாலப்பா மரகதலிங்கத்தை மீட்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார்.  எடியூரப்பாவின் தலையீட்டுக்கு பிறகு வங்கியிலிருந்து மரகதலிங்கம் மீட்கப்பட்டது.  22 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட மரகதலிங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் பத்திரமாக வைக்கப்பட்டது.  பிறகு விஜயதசமி அன்று  காவல் துறையின் பாதுகாப்புடன் மடத்துக்கு கொண்டுவரப்பட்ட மரகத லிங்கத்திற்கு,  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  இப்பூஜையில் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு மரகத லிங்கத்தை வழிபட்டனர்.  பின்பு மீண்டும் பாதுகாப்பாக மரகதலிங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.  22 ஆண்டுகளுக்கு பின்பு மரகதலிங்கத்தை மீட்டுக்கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதலமைச்சருக்கு அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

Show more
0
236
https://avalanches.com/in/bengaluru__5428_11_10_2019

கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள்,  ஏற்கனவே மழை வெள்ளத்தால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  நேற்று கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் பெய்த கனமழை காரணமாக,  மிகப்பெரிய அளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு 10 மணி அளவில் திடீரென பெங்களூரு நகர் முழுவதும் கடுமையான மழை பெய்ய தொடங்கியது.  நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்த மழை காரணமாக, பெங்களூரின் தொட்டபிதரஹள்ளு, அன்னபூர்ணா நகர் பவானி நகர் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.  500க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.  ஏறக்குறைய 3 அடி அளவுக்கு சாலைகளில் வெள்ளம் தேங்கியதால், வீடுகள் மற்றும் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், மோட்டார் பைக்குகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷா உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கியது.

இந்நிலையில் தொட்டபிதர ஹள்ளு பகுதியில் அமைந்துள்ள ஏரி மழை வெள்ளம் காரணமாக உடைந்தது.  ஏரியில் இருந்து மிக அதிக அளவில் வெள்ளநீர் வெளியாகி பவானி நகர், அன்னபூர்ணா நகர் ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  இதனால் அப்பகுதி மக்கள் மிகப்பெரிய அவதிக்கு உள்ளாகினர்.  இப்பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை களைவதற்காக,  மாநகர காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர் அப்பகுதிக்கு விரைந்தனர்.  மேலும் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு வந்து வெள்ளத்தில் சிக்கி கொண்டிருந்த மக்களை மீட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

Show more
0
181
https://avalanches.com/in/bengaluru__5427_11_10_2019

கர்நாடகா மாநிலத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.  இக்கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயாராக இருந்தன,  இதற்காக எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டது.  சித்தராமையா தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்,  வெள்ள நிவாரணம் குறித்து எழுப்பப்பட வேண்டிய கேள்விகள் என்ன என்பது பட்டியலிடப்பட்டு,  சரியான தரவுகளுடன் கேள்வி கேட்கும் வகையில் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று கூடிய கர்நாடக மாநில குளிர்கால கூட்டத்தொடரில்,  கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள சேதம் குறித்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.  மேலும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.  இதை எதிர்த்து கர்நாடக மாநில எதிர் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் சட்ட மன்ற வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று காலை அவை நடவடிக்கைகள் தொடங்கியபோது,  மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  அதன்பிறகு மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள சேதம் குறித்து பேசுவதற்கு கர்நாடக மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா அனுமதி கோரினார்.  ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  மேலும் பல்வேறு குழுக்கள் தங்கள் அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால்,  அதன்பிறகு விவாதங்களை வைத்துக் கொள்ளலாம் என சபாநாயகர் கூறினார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

Show more
0
228
Show more