के सभी प्रकाशन Ajith Binu . चेन्नई , भारत

Publications
https://avalanches.com/in/chennai__13668_24_11_2019

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் கலவரங்கள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.  சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சிவசேனா கட்சி இணைந்து தேர்தலை சந்தித்தன. தேர்தலுக்குப் பின் முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இதன் காரணமாக பாஜக கூட்டணியிலிருந்து சிவசேனா விலகியது.

சிவசேனா கட்சி சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை பிடிக்க திட்டமிட்டது.  ஆனால் மகாராஷ்டிரா ஆளுநர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.  குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது சட்டவிரோதம் என்று கூறி சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் நீதிமன்றத்தை அணுக உள்ள நிலையில்,  திடீரென்று இன்று யாரும் எதிர்பாராத விதமாக குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கப்பட்டு, பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்றது.

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைத்து பாரதிய ஜனதா கட்சி கட்சிக்கு வலு சேர்க்கும் விதமாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக அரசியல்வாதிகளிடம் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Show more
0
230
https://avalanches.com/in/chennai__13667_24_11_2019

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர்சேகரிப்பு நடவடிக்கைகள் காரணமாக சென்னை முழுவதும் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 2.44 மீட்டர் உயர்ந்துள்ளதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில்  குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்து கொண்டார். இந்த ஆலோசனை கூட்டம் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் வாரியத்தின் மேனேஜிங் டைரக்டர் ஹரிஹரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் உள்ள நீர் ஆதாரங்களை பாதுகாக்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இயற்கையிலேயே சென்னை சிறந்த ஒரு புவியியல் அமைப்பை கொண்ட நகரம் எனவும்,  சென்னையைச் சுற்றிலும் பல்வேறு ஏரிகள் குளங்கள் உள்ளதால் மழைநீர் சேகரிப்பு என்பது மிகச் சிறந்த முறையில் செயல்படுத்துவதற்கான கட்டமைப்பை சென்னை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நீர்நிலைகளை பாதுகாப்பது, புனரமைப்பு உள்ளிட்ட பணிகளை   சிறப்பாக  செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.  கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட நீர் பற்றாக்குறையை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், தற்போது பெய்துள்ள மழை மற்றும் சென்னை மாநகராட்சி மேற்கொண்ட மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் ஆகியவற்றால் சென்னை மாநகரத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது அவர் குறிப்பிட்டார். மேலும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டாயம் இடம் பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Show more
0
268
https://avalanches.com/in/chennai__13666_24_11_2019

இன்று நாடாளுமன்ற மக்களவையில் திமுக உறுப்பினர் டி ஆர் பாலு அவர்கள், பாலில் நச்சுத்தன்மை கலந்துள்ளது குறித்த கேள்வியை எழுப்பினார்.  டி ஆர் பாலு அவர்களின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்,  இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் பாலில் உள்ள நச்சுத்தன்மை குறித்து தெரிவித்தார்.  அதில் இந்தியாவிலேயே எம்1 எனப்படும் நச்சுத்தன்மை மிக்க பால் தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் திமுக தலைவர் மு க ஸ்டாலின்,  தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே நச்சுத் தன்மை மிகுந்த பால் விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.  இது குறித்து தன்னுடைய டுவிட்டர் தளத்தில் பதிவிட்டு இருக்கும் முக ஸ்டாலின்,  இன்று மக்களவையில் திமுக உறுப்பினர் டி ஆர் பாலு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக நச்சுத்தன்மை கலந்த பால் விற்பனை செய்யப்படுவதாகவும்,  மாட்டு தீவனங்களில் கலக்கப்படும் நச்சுத்தன்மை மிக்க பொருட்களால் மாடுகளுக்கு நச்சுத்தன்மை ஏற்படுவதாகவும், அதன்மூலம் மாட்டின் பாலில் நச்சுத்தன்மை மிகுந்ததாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் அனைத்து துறைகளும் சீர்கேடு இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் உணவு தரம் குறைந்ததாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பால் வளத்துறை மற்றும் கால்நடைத்துறை ஆகியவை செயல்பாடு மோசமாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Show more
0
196
Show more