Unknown crocodile
0 Subscriptions 0 Followers
ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரவை பதவி விலகியதையடுத்து பொதுஜன பெரமுன கட்சியின் அமைச்சரவை பதவியேற்றுள்ளது. தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதம் மூன்று மாத காலம் உள்ள நிலையில், இடைக்கால அமைச்சரவையை பொதுஜன பெரமுன கட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவது குறித்த கூட்டத்தொடரை நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே கூட்டவில்லை. இதன் காரணமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்படும் என தெரிகிறது.
இதன்மூலம் இடைக்கால அமைச்சரவையின் பதவிக்காலத்தை மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்க கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பதவிக்காலம் முடிந்த பிறகு அமைச்சரவையை நீட்டிப்பது தார்மீக அடிப்படையில் தவறு என்றாலும், கோத்தபாய தரப்பை பொருத்தவரை தார்மீகம் என்பதே கிடையாது என்பதே உண்மை. பல சட்ட மீறல்கள் விதிமுறை மீறல்களை கோத்தபய அரசாங்கம் செய்யத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரவை விரிவாக்கத்தின் போது பல சட்ட மீறல்கள் நடைபெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
அவருடன் 15 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 15 இணை அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். ஜனாதிபதி பதவி மாற்றம் பிரதமர் பதவி மாற்றம் அமைச்சர் பதவி மாற்றத்தை தொடர்ந்து சபாநாயகரை மாற்றும் முயற்சியில் பொதுஜன பெரமுன கட்சி இறங்கியுள்ளது. இலங்கையில் நடைமுறையிலுள்ள அரசியல் சாசனத்தின் படி நாடாளுமன்ற சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது. நாடாளுமன்றத்தை பொறுத்தவரை சபாநாயகர் முடிவு எடுக்கும் முடிவே இறுதியானது, அந்தவகையில் அதிகாரமிக்க பதவியில் தங்களுடைய கட்சியை சேர்ந்த ஒருவர் தான் இருக்க வேண்டும் என பொது ஜன பெரமுன கட்சி கருதுவதாக தெரிகிறது.
இதன் காரணமாக கரு ஜெயசூரியாவை நீக்கிவிட்டு பொது ஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த வாசுதேவ நாணயக்காரவை ஜனாதிபதியே சபாநாயகராக நியமிக்கப்பட்ட பெரமுன கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சபாநாயகரை நீக்குவதற்கு தேவையான 113 ஆதரவை பெறுவது சிரமமாக இருக்காது எனவும், சஜீத் ஆதரவாளர்களின் வாக்குகளும் இதற்கு கிடைக்கும் எனவும் பொதுஜன பெரமுன கட்சி கருதுகிறது.
இந்நிலையில் இதுவரை பாதுகாப்பு துறை மற்றும் சட்டம் ஒழுங்கு துறை யாருக்கு என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் கேபினட் அமைச்சர்களாக பதவி ஏற்ற யாரும் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு முறையை துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு துறையை இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே தன்வசம் வைத்துக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் வழக்கறிஞருமான சுமந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி ஒருவர் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு துறைகளை தன்வசம் வைத்துக் கொள்வது இலங்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதி பொறுப்பில் இருந்த எவரும் இதுவரை இதுபோன்ற அமைச்சர் பதவிகளை தன்வசம் வைத்துக் கொள்ளவில்லை எனவும், கோத்தபாய ராஜபக்ச செய்தது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் எனவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பொறுப்பில் இருக்கும் ஒருவர் அரசியல் சாசனத்தை மீறுவது தவறானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.