Semua penerbitan dari Ram Kumar . Kuala Lumpur , Malaysia

Publications
https://avalanches.com/my/kuala_lumpur__5360_11_10_2019

உலகம் நாடுகள்  புவி வெப்பமயமாதல் பிரச்சனையால் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன.  வரலாறு காணாத மழை, வறட்சி,  பனிப்பொழிவு   உட்பட்ட பல்வேறு பிரச்சனைகளை உலக நாடுகள் தற்போது சந்தித்து வருகின்றன.  எல்வினோ மற்றும் எல்நினோ கால நிலை மாறுபாட்டால் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்நிலையில் உலக வெப்பமயமாதல் பிரச்சினை காரணமாக ஜப்பான் மிகப்பெரிய மழை அச்சுறுத்தலை சந்திக்க உள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.  தற்போது ஜப்பானிய தலைநகரான டோக்கியோவில் தொடர் மழை பெய்து வருகிறது.    கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிக அளவில் மழை பெய்து வருவதால் ஜப்பானின் தலைநகரம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.  ஜப்பான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து உள்ளது.  மேலும் ஹகிபிஸ் என்ற சூறாவளி இன்னும் ஓரிரு நாட்களில் ஜப்பானை தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹகிபிஸ் சூறாவளி நெருங்கு முன்பாகவே,  ஜப்பானில் மிகப்பெரிய அளவில் கடும் மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக பேருந்து போக்குவரத்து, ரயில்வே சேவை, விமான சேவை உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. ஹகிபிஸ் சூறாவளி ஜப்பானில் மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  சூறாவளி காரணமாக ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Show more
0
165
https://avalanches.com/my/kuala_lumpur__5358_11_10_2019

சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் மேம்பாடு,  பல்லுயிர் பராமரிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு இயற்கை பூங்காக்கள் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் தற்போது தாம்சன் சிறப்பு இயற்கை பூங்கா 50 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டு,  இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.  

இந்த தாம்சன் சிறப்பு பூங்கா,  மத்திய நீர்ப்பிடிப்பு பகுதியை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.  மத்திய நீர்ப்பிடிப்பு பகுதியில் ஏராளமான பல்லுயிர்கள் வாழ்ந்து வருவதும்,  அழிவின் விளிம்பில் இருக்கும் பல்வேறு விலங்குகளின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.  மத்திய நீர்ப்பிடிப்பு பகுதியில் வசிக்கும் விலங்குகளை பாதுகாக்கும் வகையில் இந்த தாம்சன் சிறப்பு இயற்கை பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிங்கப்பூரில் செயல்படும் ஏழாவது சிறப்பு இயற்கை பூங்கா இது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் இருக்கும் விலங்குகள்  வாழிடங்களில் வசிக்கும் விலங்குகள்,  சாலைகளில் விபத்துகளை சந்திப்பதாகவும்,  அதன் காரணமாக பல்வேறு உயிரினங்கள் நாள்தோறும் உயிரிழந்து வருகிறது.  அதை தடுக்கும் நோக்கில் இது போன்ற இயற்கை பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருவதாக  சிங்கப்பூர் சுற்றுப்புற சூழல் துறை தெரிவித்துள்ளது.  பூங்கா அமைந்துள்ள பகுதியில் வாகனத்தில் செல்பவர்கள் குறிப்பிட்ட வேகத்தில் செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்த எச்சரிக்கை பலகைகள்,  பூங்கா பகுதியில் அமைந்துள்ள சாலைகளில் வைக்கப்பட்டுள்ளது.

Show more
0
96
https://avalanches.com/my/kuala_lumpur__5356_11_10_2019

அதிக பணியாளர்களைக் கொண்ட நாடு என்ற பெயரை பெற்றுள்ளது சிங்கப்பூர்.  சிங்கப்பூர் நிரந்தர குடியுரிமை வாசிகள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பலர் சிங்கப்பூரில் பணிக்காக வந்து தங்கியுள்ளனர்.  இதில் வெளிநாட்டிலிருந்து வந்து தங்கியிருக்கும் பணியாளர்களுக்கு,  சிங்கப்பூரில் செயல்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் சம்பளத்தை சரியாக தருவதில்லை என்று நீண்டகாலமாக சொல்லப்பட்டு வருகிறது.  இந்நிலையில் நிரந்தர குடியுரிமை வாசிகளுக்கும் பெரிய அளவில் சம்பள பாக்கி இருந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

சந்தை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த 3 மாதகாலமாக அந்நிறுவனம் சம்பளம் தரவில்லை.  தன்னுடைய அன்றாட செலவுகளுக்கு பணமில்லாத நிலையில் அவர் முத்தரப்பு கூட்டணியிடம் தனக்கு சம்பளம் வராத பிரச்சனை குறித்து புகார் அளித்தார்.  இதையடுத்து அந்நிறுவனத்தில் முத்தரப்பு கூட்டணி சோதனையிட்டது.  அப்பொழுது அவருக்கு மட்டுமல்லாமல் மேலும் பலருக்கு சம்பள பாக்கி வைத்துள்ளதாக தெரியவந்தது.  இந்நிலையில் பணியாளர்களின் சம்பள பாக்கியை முத்தரப்பு கூட்டணியின் பெற்றுக் கொடுத்துள்ளது.

இதேபோல் சிங்கப்பூர் முழுவதும் உள்ள நிறுவனங்களில், சம்பள  பாக்கிகளை மீட்கும் பணியில் முத்தரப்பு கூட்டணி ஈடுபட்டுவருகிறது.  இதுவரை 29 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி அளவுக்கு,  பணியாளர்களின் சம்பளம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களுக்கு வழங்கும் சம்பள விபரங்கள் குறித்து நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. 

Show more
0
119
Show more